Thursday, October 30, 2014












பூலோகம் வந்த பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் (ஆன்மீகக் கதை )

 ஒரு நாள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பூலோகம் வந்து மானிடர்களை பார்த்து விட்டு செல்லலாம் என எண்ணி நகர்வீதி உலா வந்தாராம், சாதாரண மனிதர் உருவில் வந்த ஸ்ரீ கிருஷ்ணரை அடையாளம் கண்டு கொண்ட பக்தர் ஒருவர் அப்பனே ! "பூலோகத்தில் வந்த உங்களை சந்தித்ததில் எனக்கு பெரும் மகிழ்ச்சி "! என்றார் . அதற்கு பரவாயில்லை சாதாரண மனித உருவில் வந்தாலும் கண்டு கொண்டாய், சரி நான் பூலோகத்தில் சில மனிதர்களை சந்திக்க வேண்டி உள்ளது . என்னுடன் வாருங்கள் என அழைத்துச் சென்றார் .

பக்கதரும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அழைப்புக்காக உடன் சென்றார் . சிறிது தூரம் சென்றதும் " பக்தா, எனக்கு தண்ணீர் தாகமாக உள்ளது. இந்த செல்வந்தர் வீட்டில் தண்ணீர் வாங்கி வா என கட்டளையிட்டார் . பக்தரும் மறுப்பேதும் சொல்லாமல் அந்த செல்வந்தர் வீட்டு கதவை தட்டினார் .

 வெளியே வந்த செல்வந்தரிடம் பக்தன் "பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் வந்திருக்கிறார் உங்கள் வீட்டில் ஒரு சொம்பில் தண்ணீர் வாங்கி வரச்சொன்னார் எனச்சொல்ல அந்த செல்வந்தரோ " யாராக இருந்தாலும் தண்ணீர் தர முடியாது. அப்படி கொடுத்தால் எங்கள் வீட்டில் செல்வம் தங்காது . தண்ணீர் இல்லை என்று சொல்லி விடு என திருப்பி அனுப்பினார் .

 பக்தன் ஏமாற்றத்தோடு திரும்பி வந்து பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் தண்ணீர் தர முடியாது என அலட்சியமாக சொல்லி விட்டார் எனச் சொல்ல பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் சிரித்தாவாறு " இந்த செல்வந்தனுக்கு மேலும் பொன்னும் பொருளும் வந்து சேரட்டும் எனச் சொல்லி விட்டு, ஸ்ரீ கிருஷ்ணர் மேலும் நடக்க ஆரம்பித்தார் . பக்தரும் குழம்பியவாறு அவர் பின்னே நடக்கலானார் .

அடுத்து அவர்கள் சென்றது ஓர் தனிக்குடிசை வீடு . அங்கு வறுமைகுடி கொண்டிருந்தது. அங்கு குழந்தைகள்,கணவர் ,தாய், தந்தையர் இல்லாமல் அனாதையாக ஒர் வயதான பெண்மணி மட்டும் வசித்து வந்தார் .ஒரே வயதான மாடு வளர்த்து பால் விற்று அந்த பணத்தில் தம் சுய தேவைகளை பூர்த்தி செய்து வந்தார். ஆனால் ஸ்ரீகிருஷ்ணர் மேல் அளவு கடந்த பக்தி கொண்டவர்.

அந்த பெண்மணி வீட்டின் முன்பு நின்ற பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் "இந்த வயதான பெண்மணி வீட்டில் தண்ணீர் வாங்கி வா என பக்தரிடம் சொல்ல " சரி என்றவாறு வயதான பெண்மணியிடம் சென்ற பக்தர் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் உங்கள் வீட்டின் முன்பு வந்து நிற்கின்றார் . தண்ணீர் தாகமாக உள்ளதாம் , தண்ணீர் கொடுங்கள் என்றதும் . அந்த வயதான பெண்மணி "நான் அனு தினமும் தொழும் எம்பெருமான் ஸ்ரீ கிருஷ்ணரே வந்து இருக்கிறாரா ? என மிக்க மகிழ்ச்சியுடன் ஒர் பாத்திரத்தை சுத்தம் செய்து அதில் சுத்தமான நீர் கொண்டு சென்று ஸ்ரீ கிருஷ்ணரிடம் கொடுத்து வணங்கி நின்றார் . தண்ணீர் பருகியவுடன் ஸ்ரீ கிருஷ்ணரை பார்த்த பிரமிப்பில் நிற்க பகவான் சிரித்தவாறு போய் வருகிறேன் எனச் சொல்லி விட்டு நடக்க ஆரம்பித்தார் .

கொஞ்சம் தூரம் நடந்து சென்றதும் அந்த வயதான பெண்மணி வைத்திருந்த மாட்டை பார்த்து ஸ்ரீ கிருஷ்ணர் " இந்த பசுமாடு இறந்து போகட்டும் " எனச்சொல்லிவிட்டு நடக்க ஆரம்பித்தார் . ஸ்ரீ கிருஷ்ணருடன் வந்த பக்தனுக்கோ குழம்பிய வாறு கிருஷ்ணரிடம் ஓர் கேள்வி கேட்டான் " பகவானே நான் குழப்பமாக உள்ளேன் .

 முதலில் ஓர் செல்வந்தர் வீட்டிற்கு சென்றோம் . அவர் தண்ணீர் இல்லை என்றார் . அவருக்கு மேலும் செல்வம் சேரட்டும் என்றீர்கள் , இரண்டாவதாக ஒர் வயதான பெண்மணி தண்ணீர் தந்து தாகம் தீர்க்க உதவினார் . அவருக்கு மாடு செத்துப்போகட்டும் என்கிறீர்கள் . கஷ்டப்படுகிறவர்களுக்கு சாபமும் , செல்வச் செழிப்போடு இருப்பவனுக்கு வரமும் தந்துள்ளீர்களே ? இதுதான் இறைவன் தீர்ப்பா? என கேட்க

 பகவான் கிருஷ்ணர் சொன்னார்

 (இனி உள்ள வரிகள் முக்கிய மானவை கவனமாக படியுங்கள் )

 " பக்தா உனக்கு புரியம்படி சொல்கிறேன் கேள் என்றவாறு " எவன் ஒருவன் அளவுக்கதிகமாக பொன்னையும் பொருளையும் தேடி அலைகிறானோ அவன் நிம்மதியை இழக்கிறான் . அதனால்தான் அவனுக்கு மேலும் பொன்னும் பொருளும் சேரட்டும் என சாபமிட்டேன் . அதை நீ வரமென நினைத்துக்கொண்டாய் !

 இரண்டாவதாக அனாதையாக இருந்த வயதான பெண்மணி என்னுடைய தீவிர பக்தை . அவளுக்கு இந்த பூலோகத்தில் இருக்கும் ஒரே பிடிப்பு இந்த வயதான பசு மாடுதான் . அதுவும் இறந்து விட்டாள் . இந்த பெண்மணியும் இறந்துவிடுவாள் . அவளுக்கு மேலோகத்தில் என்னை அனு தினமும் வழிபாடு செய்ததற்காவும் ,நல்ல உள்ளத்திற்காகவும் சொர்க்கத்தை தயார் செய்து வைத்திருக்கிறேன் . அவளை மேலோகத்தில் சந்தோஷமாய் காத்துக்கொள்வேன் என்றவாறு கூறி நான் வந்த வேளை முடிந்தது. சென்று வருகிறேன் எனச்சொல்லி அந்த பக்தனை ஆசிர்வதித்து மாயமாய் மறைந்து போனார் .

 பக்தனும் பல வாழ்வியல் சூட்சமங்களை அறிந்தவனாக பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் சென்ற திசையை நோக்கி கை கூப்பி தொழுதார் .
மனிதன் விஷயங்களைக் கருதும்போது அவற்றில் பற்றுதலுண்டாகிறது, பற்றுதலால் விருப்பமுண்டாகிறது, விருப்பத்தால் கோபம் உண்டாகிறது.

கோபத்தால் மயக்கம், மயக்கத்தால் நினைவு தவறுதல், நினைவு தவறுதலால் புத்தி நாசம், புத்தி நாசத்தால் அழிகிறான்.

இதற்கு காரணம் மனிதன் தான் ஆத்மா என்பதை மறந்து தன் உடல்த் தான் நான் என்றும் தன் உடலை கொண்டு அனைத்தையும் செய்கிறான். அவன் நினைப்பது, பார்ப்பது, கேட்பது எல்லாம் தனக்கு கிடைக்கவேண்டும் என்று என்னுகிறான்.

அவன் எதிர்ப் பார்ப்பது சில சமயம் கிடைக்கும் சில சமயம் கிடைக்காது. இதனால் தன் உடலுக்கு எற்படும் பலன் (இன்பம் துன்பம், இலபம் நஷ்டம்) அனைத்தையும் தானக்கு வந்ததாக நினைக்கிறான். இதனால் அவன் புத்தி நாசம் அடைந்து கோபம் உண்டாகிறது.

இப்படி வாழும் மனிதர்களுக்கு கிடைக்கும் சுகம் உண்மையும் இல்லை நிரந்தரமும் இல்லை. 

ஒவ்வேறு மனிதனும் உலக போகங்களில் பற்றும் ஆசையும் இல்லாமால் தன் புலன்களை அடக்கி தான் ஆத்மா என்று உணர்ந்து ஆத்மாவாக இருந்தல் தான் தனக்கு எது வந்தாலும் அதை சமாக எற்றுக் கொண்டு உண்மையன சந்தோஷத்தை அடைவான்..
ஸ்ரீமத் பாகவதம் – வேளுக்குடி கிருஷ்ணன் - 12

முதல் ஸ்கந்தம் – மூன்றாம் அத்தியாயம் 

திருமாலின் அவதாரங்கள்

 பரித்ராணாய ஸாதூனாம்
விநாசாய ச துஷ்க்ருதாம்
தர்ம ஸம்ஸ்தாபநார்த்தாய
ஸம்பவாமி யுகே யுகே!

 பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பகவத் கீதையில், நான்காவது அத்தியாயத்தில் தன் அவதாரத்தின் ரகசியத்தை வெளியிடுகிறார். பெருமான் பூவுலகத்தில் பிறப்பது ஸாதுக்களை ரக்ஷிக்கவும், தீயவர்களை அழிக்கவும், தர்மத்தை நிலை நிறுத்தவும் ஆகிய முக்கியமான மூன்று பயன்களுக்காக! ஒவ்வொரு யுகத்திலும் எத்தனையோ அவதாரங்களை பகவான் செய்கிறார். பெருமான் அவதாரம் செய்ய வேண்டிய தேவை என்ன?

 பிரளயத்தின் போது, ஜீவர்கள் அனைவரும் பரமாத்மாவோடு ஒன்றிக் கிடக்கிறார்கள். மேற்கொண்டு அவர்களைப் படைக்காவிடில், கர்ம யோகத்தையோ, ஞான யோகத்தையோ, பக்தி யோகத்தையோ அல்லது சரணாகதியையோ அனுஷ்டித்து ஜீவர்களால் பெருமானை அடைய முடியாமல் போகும். உடல் இருந்தால்தான், அறிவு இருந்தால்தான், பக்தியோ, சரணாகதியோ செய்ய முடியும். நம்மீது கருணை கொண்ட எம்பெருமான் பிரளயத்தை முடிவுக்குக் கொண்டு வந்து, படைக்கத் தொடங்குகிறான். நம் அனைவருக்கும், அவரவர்களின் கர்மத்திற்குத் தகுந்தாற் போல் பிறவி கொடுக்கிறான். நாம் உடலையும், புலன்களையும், மனத்தையும் பகவானிடத்திலிருந்து பெறுகிறோம். வெறும் கருவிகளாக உடல் இருந்தால் போதுமா? உயர்ந்த அறிவை வளர்த்துக் கொள்வதற்கு, வழிகாட்டிகளான சாஸ்திரங்கள் தேவை. ஆகவே பகவான், முதலில் உடலையும், கூடவே ஞானத்தையும் கொடுத்து, விளக்கு போன்ற வேதங்களையும் அருளினான். நாம் வேதங்களைப் படித்து, அதன் வழி நடந்து, பக்தி யோகத்தைச் செய்து பெருமானை அடைவோம் என்பது பெருமானின் எதிர்பார்ப்பு!

ஆனால், நாமோ, மனம் போன வழிக்கு உடலைச் செலுத்தி, தீய வழிகளில் நடந்தோம். மேலும் மேலும் பாவங்களைச் சேர்த்தோம். நடுநடுவே ஏதோ சில புண்ணியங்களையும் அவ்வப்போது செய்தோம். இதன் பயனாக, மாறி மாறி இன்பத்தையும், துன்பத்தையும் அனுபவித்து, வெவ்வேறு பிறவிகளில் உழன்று கொண்டு வந்தோம். ஸம்ஸாரம் என்னும் பெருங்கடலிலே நாம் விழுந்திருக்கிறோம். ‘இதிலிருந்து இவனை வெளியிலே கொண்டு வருவது எப்படி?’ என்று யோசித்த எம்பெருமான், ‘நாம் வைகுண்டத்திலே இருந்து கொண்டு, இவர்களை எப்படி தூக்குவது?’ ஒருவன் ஆழமான கிணற்றுக்குள் விழுந்து விட்டால், தீயணைப்புப் படையினர், முதலில், மேலிருந்து தூக்கப் பார்ப்பார்கள். அது முடியாமல் போனால், உள்ளே குதிக்க வேண்டும் அல்லது பக்கத்தில் ஆழமான கிணறு தோண்டி, கீழே சென்று, விழுந்தவனைக் காப்பாற்ற வேண்டும். பகவான், எங்கோ வைகுண்டத்தில் இருந்து கொண்டு, அதல பாதாளத்தில் விழுந்திருக்கும் நம்மைத் தூக்க இயலாது. அதற்காக, தாமே இப்பூவுலகத்தில் பிறப்போம் என்று முடிவு செய்கிறான். அதனால்தான் எத்தனையோ அவதாரங்களைச் செய்கிறான்.

 ‘அவதாரம்’ என்றால், இறங்குதல் என்று பொருள். வைகுண்டத்திலிருந்து பகவான் நம்மைக் கடைத்தேற்றுவதற்காக இறங்குகிறான். இங்கே ஒரு ஐயம் எழலாம். ஏன் பகவான்தான் இறங்கி வந்து நம்மைக் காக்க வேண்டுமா? அவனுடைய சுதர்சன சக்கரத்தையோ, கருடனையோ, ஆதிசேஷனையோ அனுப்பி வைத்து, நம்மை காக்கச் சொன்னால், அவர்கள் கடமை ஆற்ற மாட்டார்களா? கண்டிப்பாகச் செய்வார்கள். ஆனால், கருணையே வடிவான பெருமான், அப்படிச் செய்ய மாட்டான். ஓர் உதாரணத்தைப் பார்ப்போம்:

ஒரு அரசன் தன் சிறு குழந்தையை கைகளில் வைத்துக் கொண்டு, கப்பலிலே சென்று, வேடிக்கை காட்டிக் கொண்டு வந்தான். சட்டென்று கப்பல் அசைந்தது. குழந்தை கை தவறி கடலில் விழுந்தது. அரசன் பதறிப் போய் உடனே கடலில் குதித்து, நீந்தி, குழந்தையைக் காப்பாற்றினான். அரசனுக்கு அருகில் சேனாதிபதியும், மந்திரியும், வீரர்கள் பலரும் இருந்தார்கள். அவர்களை ஏவி, அரசன் குழந்தையைக் காப்பாற்றச் சொல்லி இருக்கலாமே! ஏன், தானே குதிக்க வேண்டும்? ஒரே பதில்தான்! அரசன் மற்றவர்களை ஏவி இருந்தால், அவன் அரசனாக இருந்திருப்பான். தகப்பனாக இருந்திருக்க மாட்டான். தானே குதிக்கவேதான், தந்தைக்குரிய பாசத்தோடே நடந்து கொண்டான்.

இந்தத் தந்தைக்கும், சிறு குழந்தைக்கும் இரண்டு ஆண்டுகள் தொடர்பு இருக்கலாம். வயதான நமக்கும், நம் தந்தைக்கும் நாற்பது அல்லது ஐம்பது ஆண்டுகள் தொடர்பு இருக்கலாம். ஆனால், ஒவ்வொரு ஜீவாத்மாவுக்கும், பகவானுக்கும் இன்று, நேற்றா தொடர்பு? நித்தியமான முடிவில்லாததான தொடர்பு. அவ்வளவு தூரம் நம்மோடு தொடர்புடைய, பாசமுடைய பெருமான் யாரையாவது அனுப்பியா நம்மை காப்பாற்றச் சொல்வார்? தானே குதித்தால்தானே தந்தை, தாய்க்குரிய பாசம் அவனிடத்தில் தங்கும்! பாசமுடைய ஒரு தாயைப் போல, நம்மைக் காப்பதற்காக எம்பெருமான் பூலோகத்தில் இறங்குகிறார். அவருடைய அவதாரங்கள் பொய் கிடையாது. கானல் நீரைப் போலப் பொய்யானவை அல்ல; நிஜமானவை. பெருமானுடைய அவதாரங்கள் எண்ணிறந்தவை. அவதரிக்கிறான் என்று சொல்லுகிறபடியால், கண்டிப்பாக பிறப்பு உள்ளது என்று தெரிகிறது. ஆனால், சாத்திரங்களோ, 

அஜாயமான: பஹுதா விஜாயதே

 – என்று கூறுகின்றன. பிறப்பே இல்லாத பெருமான் பல வகையான பிறப்புக்களை ஏறிட்டுக் கொள்கிறான். ஆழ்வார் அப்படியே தமிழ்ப் படுத்தி,
பிறப்பில் பல்பிறவிப் பெருமான்

 – என்று சாதித்தார். ‘பிறப்பில்’ என்பதால், பிறப்பில்லாதவன் என்று விளங்குகின்றது. ‘பல்பிறவிப் பெருமான்’ என்றதால் பல பிறவிகள் எடுத்துக் கொள்கிறான் என்று விளங்குகின்றது. பிறவியற்றவனுக்கு பிறப்பு உண்டு என்று சொன்னால் முரண்படாதா? இதில் எந்த முரண்பாடும் இல்லை. அவன் பிறக்கிறான் என்பது உண்மை. பிறக்கவில்லை என்பதும் உண்மை. இதில் குழப்பமே இல்லை. அவன் பிறப்பதில்லை; அதாவது நம்மைப் போல் பிறப்பதில்லை. நாம் அனைவரும் கர்மத்தாலே தூண்டப்பட்டு, கர்மங்களைக் கழித்துக் கொள்வதற்காகப் பிறக்கிறோம். ஆனால், பகவானுடைய பிறவிக்குக் கர்மங்கள் காரணமாகாது. பெருமானுடைய விருப்பம், இச்சை - நம்மைக் காக்க வேண்டும் என்கிற துடிப்பு. அதுவே அவர் பிறவிக்குக் காரணமாகிறது. ஆக, கர்மங்களால் பிறக்கவில்லை என்பதால், ‘பிறப்பிலி’ என்று கொண்டாடப்படுகிறான். நம் போன்றோரைக் காக்க வேண்டும் என்ற விருப்பத்தால் பிறக்கிறான் என்பதால், ‘பிறக்கிறான்’ என்று போற்றப்படுகிறான். இப்படி இரண்டுமே உடைய பெருமான் எத்தனையோ அவதாரங்களைச் செய்கிறான்.
ஸ்ரீ மத் பகவத்கீதையில் ...................................

சுகத்துக்கு ஏதுவான லாபம், ஜயம் ஆகியவைகளில் விருப்பமும், துக்கத்துக்கு ஏதுவான நஷ்டம், அபஜயம் ஆகியவைகளில் வெறுப்பும் கொள்ளுதல் பாமரர் இயல்பு. தங்களைப் பண்படுத்துவோர் அங்ஙனம் விருப்பும் வெறுப்பும் கொள்ளாது நிகழ்வன யாவையும் நடுநிலையிலிருந்து சமனாகக் கருதவேண்டும். விருப்பும் வெறுப்பும்தான் மனிதனைக் கருமத்தில் கட்டுப்படுத்துகின்றன. கருமத்தில் அல்லது கருமபலனில் பற்றில்லாது அதைச்செய்யும் பொழுது பழைய கருமம் குறைகிறது; புதியது ஒன்றும் சேர்க்கப்படுவதில்லை. இந்த மனநிலை முக்திக்கு மார்க்கமாகிறது. உலகப்பற்றுடைய ஒருவன் செய்கிற அதே கர்மத்தைக் கர்மயோகியும் செய்கிறான். ஆனால் மனநிலையில் இருவருக்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது. மனநிலையைக் கொண்டுதான் எது பந்தபாசம், எது பற்றற்ற பாங்கு என்று தெரிந்து கொள்ள முடியும். ஒரு மனிதன் எப்போது வெற்றி தோல்வி, சுகம் துக்கம், லாபம் நஷ்டம் இவற்றை சமமாக ஏற்று ஆசைகளையும் எண்ணங்களையும் துறந்து தனது கருமங்கள் அனைத்தையும் நிறைவேற்றி இருதிவரை வாழ்கிறானோ அவன் பரமாத்மாவை அடைவான்.
பகவத் கீதையின் ஆத்ம தத்துவம் செல்வத்தில் பெரும் பற்றுடைய ஒருவனது செல்வம் திடீரென்று அழிந்துபோனால், நான் தொலைந்தேன் என்கிறான் அவன். செல்வம் தன் சொரூபமாகாது. தன்னுடைய ஒன்று அழிய, மனிதன் தானே அழிந்து போவதாக நினைக்கிறான். தன்னுடையது என்பது மமகாரம். தடித்த மமகாரம் அகங்காரம் போன்று ஆய்விடுகிறது. தேகத்தைத் தான் என்று எண்ணுவது அகங்காரம். மாறுபடும் தன்மையது தேகம். மாறாப்பெருநிலையில் வீற்றிருப்பது ஆத்ம சைதன்யம். தோன்றிய மேகம் மறையும்பொழுது ஆகாசம் எப்படி அழிவதில்லையோ, அப்படி ஆக்கை (உடல்) அழியும்போது ஆத்மா அழிவதில்லை. அதவது, நான் என்பது உடல் இல்லை. நான் என்பது ஆத்மா. அழிவு என்பது உடலுக்கு மட்டும் தான். ஆத்மாவுக்கு இல்லை. ஆத்மா எக்காலத்திலும் இறப்பதுமில்லை பிறப்பதுமில்லை. ஆத்மா என்றும் நித்தியமானவன். ஆத்மா என்றும் எக்காலத்திலும் அழியாதது. யாராலும் அழிக்க முடியாதது..

சில இடங்களில் பிரம்மனிடமிருந்து அனைத்தும் தோன்றியதாக கூறுகிறது. சில இடங்களில் சிவனிமிருந்து அனைத்தும் தோன்றியதாக கூறுகிறது. மற்றும் சில இடங்களில் இந்திரன்,ஆகாயம், மற்றும் தேவி தேவதைகளிடமிருந்தும் அனைத்தும் தோன்றியதாக கூறுகிறது. ஆனால் வேதத்தில் கூறியுள்ளபடி பார்த்தால் படைப்பின் ஆரம்பத்தில் விஷ்ணு மட்டுமே இருந்தார். பிரம்மனோ சிவனோ அக்னியோ ஆகாயத்தில் சந்திரனோ சூரியனோ இருக்கவில்லை. எல்லவற்றையும் படைத்து எல்லவற்றையும் அனுபவிக்க விஷ்ணு மட்டுமே இருந்தார் என கூறும்போது மற்ற தேவர்கள் ஆதியிலில்லை. ஆதியில் கூறிய அனைத்து தேவர்களின் பெயரும் விஷ்ணுவை மட்டுமே சேரும் என வேதம், இதிஹாசம், உபநிஷத் புராணங்களில் கூறுகிறது.
பாகவதம் 10.14.58 முக்தி அளிப்பவனும் முகுந்தன் என்ற பெயர் பெற்றவனும் பிரபஞ்ச தோற்றத்தின் அடைகலமுமான பகவானின் பாதகமலங்கலெனும் ஓடத்தை அடைந்தவனுக்கு, இவ்வுலகெனும் கடல் கன்றுகுட்டியின் குளம்பில் தேங்கிய நீர் போன்றதே. பக்தரின் நோக்கம் யாது எனில் ஒவ்வொரு அடியும் துன்பமயமான இவ்வுலகல்ல, பரமபதமான துன்பங்களேயற்ற வைகுண்டமே. பாகவதம் : க்ருஷ்ணஸ் து பகவான் ஸ்வயம் ”’ கிருஷ்ணர் மட்டுமே பகவான். கிருஷ்ணரே முழுமுதற்கடவுள்”’ கிருஷ்ணருக்கு அசமேளர்த்த என்ற ஒரு நாமம் உண்டு. இதன் அர்த்தம் தனக்கு சமமானவரோ தன்னைவிட உயர்ந்தவரே இல்லாதவர் என்பதாகும்.
நமது வேதங்களில் சொன்னதை எப்படி புரிந்து கொள்வது நாம் வாழும் இந்த காலம் கலியுகம் ஆகும். கலியுகம் என்றால் சண்டையும் பிரச்சனைகளும் நிறைந்த ஆக இருக்கும் என்பதே இதன் அறிகுறிகள். சண்டையும் பிரச்சனையும் வரக் காரணம். மனிதனின் அடிப்படை நற்குணங்கள் இல்லாமல் போனதே காரணம். இந்த நற்குணங்கள் கருணை, ஒழுக்கம், உண்மை, தூய்மை இந்த 4 நற்குணங்களில் இருந்து விலகும் போது தவறுகள் செய்வார்கள்.





இந்த பூலோகத்தில் ஹரி பக்தியை விட உயர்ந்ததோ ஈடு இணையானதோ சிறப்பை தருவதோ எதுவுமில்லை. ஹரி பக்தி செய்யவில்லை எனில் மனித ஜன்மம் எடுத்ததே வீண். பிரம்மாதி தேவரும் ஹரியை சந்தோஷப்படுத்தவே தவம் செய்கிறார்கள். ஹரி பக்தரின் குடும்பத்தவர் நரக வேதனை அனுபவிக்க தேவையில்லை. ஹரி நாமத்தை உச்சரித்தவன் பிற மந்திரங்களை உச்சரிக்க வேண்டியதில்லை. ஹரியின் பாதகமலதீர்த்தத்தை தன் சிரம்மேல் தாங்குபவன் பிற புண்ணியதீர்த்தங்களில் நீராட வேண்டியதில்லை. மற்றும் யாகம்,தானம், தவம் ஆகியவற்றை செய்தபலன் கிட்டும் மற்றும் மீண்டும் இவ்வூலகில் மறுபிறப்பு எடுக்கவேண்டியது கிடையாது.
இந்த கலியுகத்தில் யாருடைய மனதில் பாவம் செய்ய எண்ணங்கள் உள்ளதோ அவர்கள் வேதங்களையும் வேத வழி வந்த இலக்கியங்களையும் ஆன்மீக குருக்களையும் நம்ப மாட்டார்கள்.
விஷ்ணுவின் உடலில் இருந்து வெளி வரும் ஒளி ப்ரம்மன்,இதை பல மதங்கள் என்ற பெயரில் உள்ளவர்கள் வணங்குகின்றனர். ஒவ்வொரு ஆத்மாவிலும் உடன் இருப்பவர் பரமாத்மா (உள்ளும் புறமும் நிறைந்து இருப்பவர்) விஷ்ணு , முழுமையாக உள்ள முழுமுதற் கடவுள் பகவான் ஸ்ரீ விஷ்ணு. கடவுளை ஒலி வடிவத்தில் உச்சரிப்பது ஓம் என்ற பிரணவம். பகவான் என்றால் விஷ்ணு மட்டுமே. இதை பகவத் கீதை, பாகவதம் மற்றும் பல வேத இலக்கியங்களில் உள்ளது. கடவுள் ஒருவரே அவர் நான் தான் என்று விஷ்ணு கூறுகிறார்.
சிவன் கூறுகிறார் : எல்லா வழிபாட்டிலும் விஷ்ணு வழிபாடே சிறந்தது. அதை விட அவரின் பக்தரை வழிபடுவதே மிகச் சிறந்தது. காசியில் இறப்பவர்கள் காதில் ராம நாமத்தை கூறியே முக்தியளிப்பதாக கூறுகிறார். ராம நாமமே ஒராயிரம் விஷ்ணு நாமத்திற்கு சமமானது எனவும், ராம நாமத்திலே தான் ஆனந்மடைகிறேன் என் கூறுகிறார். பதிவிரதை எவ்வாறு புருஷனை பூஜிக்கிறாளோ அவ்வாறு பகவான் கிருஷ்ணரை தான் பூஜிப்பதாக கூறுகிறார். வேதத்தில் ஸ்ரீசூக்தத்தில் லக்ஷமியின் தவப்பலனாலேவில்வம் வந்தது என கூறுகிறது. லக்ஷ;மியின் பக்தன் சிவன் எனவே வில்வஇலையை தன் தலையில் தங்குகிறார்.



பகவான் விஷ்ணு கூறி இருக்கிறார் ஒரு மனிதன் எப்போது முழூமையாக பக்குவம் அடைகிறானோ அப்போதுதான் இறைவனை உணர்வான். இந்துக்கள் இந்துக்களுக்குறிய வேதங்களையும், புராணங்களையும், ஸ்ரீமத் பகவத் கீதை போன்ற புத்தகங்களை இந்துக்கள் ஏன் வாசிப்பது இல்லை???? இந்துவாக பிறந்த ஒவ்வோரு மனிதனும் வேதங்கள், புராணங்கள், ஸ்ரீமத் பகவத் கீதை போன்ற புத்தகங்களை கட்டாயமாக வாசிக்கவேண்டும். அப்போது தான் உண்மையை உணர்வீர்கள்..
== நமது சாஸ்த்திரத்தில் உள்ள அறிவுகளில் எல்லாம் அரசனாக விளங்கும் மற்றும் மிகமிக ரகசியமான பகுதிகள்:விஷ்ணு மட்டுமே முழுமுதற்கடவள் மற்ற அனைவரும் தேவர்களே ஆவார்கள். 30 கோடி தேவர்களும் விஷ்ணுவின் சேவகர்கள் மற்றும் பக்தர்கள். விஷ்ணுவை மட்டும் வழிபட்டால் போதும்,பிற தேவி தேவதைகளை வணங்கவேண்டிய தேவையில்லை. காரணம் விஷ்ணுவிடம் அனைத்தும் முழுமையாக உள்ளன.ஆன்மீகம் என்றால் தர்மத்தின் உள்ளபடி நடத்தல், பொருள் சேர்த்தல், பௌதீக ஆசைகளை அடைதல், ஆண்டவன் திருநாட்டிற்குள் செல்லுதல் இந்த நான்கில் முதல் மூன்றை மட்டுமே பிற தேவி தேவதைகள் மிகமிகக் குறைந்த அளவு மட்டுமே தரமுடியும். அதுவும் விஷ்ணுவிடம் மிருந்து தான் பெற்றுத்தருகிறார்கள். ஆனால் இந்த நான்கையும் விஷ்ணு மட்டுமே முழுமையாக தரமுடியும். அதிலும் மோக்ஷத்தை விஷ்ணுவாள் மட்டுமே தரமுடியும். தேவர்களை வணங்குவது சாஸ்த்திரத்திற்கு உட்படாத செயலாகும். மற்றும் தேவவூலகங்கள் சென்றாலும் மீண்டும் இந்த துன்பமயமான இவ்வூலகில் பிறந்தே ஆகவேண்டும். இந்த ஜடவுலக துன்பங்களான பிறப்பு, இறப்பு, முதுமை,நோயிலிருந்து மீள ஒரே வழி விஷ்ணுவை மட்டும் சரணடைந்து வழிபடுவதே ஆகும் வேறுவழியே இல்லை. விஷ்ணு மட்டுமே முழுமுதற்கடவுள் என வேதங்கள், இதிஹாசங்களும் உபநிஷத்துக்களும்.,புராணங்களில் உள்ளது அதர்வணவேதம்: கோபால தாபனீ உபநிஷத் சச்சிதானந்த ரூபாய க்ருஷ்;ணயாக்லிஷ்ட காரிணே நமோ வேதாந்த வேத்யாய குரவே புத்தி ஸாக்ஷிணே நித்யமான ஆனந்தம்இஇருப்பு, அறிவுவை உடைய திவ்ய சொரூபரான விஷ்ணுவிற்கு என் பணிவான வணக்கத்தினை நான் செலுத்துகின்றேன். நான் ஏன் அவருக்கு என்னடைய வந்தனங்களை செலுத்துகிறேன் என்றால் அவரை புரிந்து கொள்வது என்பது வேதங்களை புரிந்து கொள்வதாகும். ஆகையால் அவரே உன்னதமான ஆசான் ஆவார்.























ஸ்ரீகிருஷ்ணரின் சரித்திர புத்தகம் எந்த வீட்டில் உள்ளதோ அந்த வீட்டுப்பக்கம் துன்பங்கள் அணுகுவதில்லை. எமராஜனும் நெருங்க அஞ்சுவான். இந்த பூலோகத்தில் ஹரி பக்தியை விட உயர்ந்ததோ ஈடு இணையானதோ சிறப்பை தருவதோ எதுவுமில்லை. ஹரி பக்தி செய்யவில்லை எனில் மனித ஜன்மம் எடுத்ததே வீண்.

பிரம்மாதி தேவரும் ஹரியை சந்தோஷப்படுத்தவே தவம் செய்கிறார்கள். ஹரி பக்தரின் குடும்பத்தவர் நரக வேதனை அனுபவிக்க தேவையில்லை. ஹரி நாமத்த உச்சரித்தவன் பிற மந்திரங்களை உச்சரிக்க வேண்டியதில்லை. ஹரியின் பாதகமலதீர்த்தத்தை தன் சிரம்மேல் தாங்குபவன் பிற புண்ணியதீர்த்தங்களில் நீராட வேண்டியதில்லை. மற்றும் யாகம்,தானம், தவம் ஆகியவற்றை செய்தபலன் கிட்டும் மற்றும் மீண்டும் இவ்வூலகில் மறுபிறப்பு எடுக்கவேண்டியது கிடையாது.ஹரியின் ஆலயத்தில் சேவை செய்பவர் பிற அனுகூலமான சேவை அவசியமில்லை. பூலோகத்தில் பெண்ணாசை என்னும் காமத்தை விடுவது கடினம், மூவுலக தேவராலும் முடியாதது, ஹரி பக்தரால் மட்டுமே முடியும். குரு பக்தியாலே மட்டுமே மனதில் பிற சலனம் ஏற்படுவதில்லை. பகவான் கிருஷ்ணரை பூஜிப்பவர்கள் மற்றவர்களால் தொழும் நிலைக்கு உயர்ந்து விடுவார்கள் அதுதான் ஹரி பக்தியின் மகிமை. வைஷ்ணவம் என்றால் விஷ்ணுவின் மதமாகும். வைஷ்ணவனை தூஷிப்பவர்கள் மஹாபாவம் செய்தவர்களாவார்கள். அவர்கள் நாய்,நரி பிறவி எடுப்பர் மற்றும் பூத பிசாசு பீடைகளால் துன்புறுவார்கள். கஸ்தூரி மானிடமுள்ள கஸ்தூரி வாசனையும் புனுகு பூனையிடமுள்ள வாசைனை திரவியமும், கற்பூரம் எரிதவன் அதனதன் மகிமையை அறிவதில்லை. அதே போல ஹரி பக்தர்கள் அவர்களின் சிறப்பை அறிவதில்லை. அறிந்திருந்தாலும் அதை வெளிப்படுத்துவதில்லை.
ராம் ராம் என்றால் நல்லது நடக்கும்
ராம் ராம் என்றால் அமைதி கிடைக்கும்
ராம் ராம் என்றால் குணங்கள் சிறக்கும்
ராம் ராம் என்றால் மகிழ்ச்சி பிறக்கும்
ராம் ராம் என்றால் உள்ளம் உருகும்

ராம் ராம் என்றால் உவகை பெருகும்
ராம் ராம் என்றால் அறிவுத் தெளியும்
ராம் ராம் என்றால் தர்மம் புரியும்
ராம் ராம் என்றால் வீரம் விளங்கும்
ராம் ராம் என்றால் வெற்றி விழையும்

ராம் ராம் என்றால் செல்வம் செழிக்கும்
ராம் ராம் என்றால் கதவுகள் திறக்கும்
ராம் ராம் என்றால் மனது அடங்கும்
ராம் ராம் என்றால் புலன்கள் ஒடுங்கும்

ராம் ராம் என்றால் யோகம் நிலைக்கும்
ராம் ராம் என்றால் மோட்சம் கிடைக்கும்

ஸ்ரீ ராமர் புகழை தினமும் ஜபித்தால் ஒரு வைரம்
போல மனதில் பதித்தால் துன்பம் எல்லாம்
தொலைவில் ஓடும் இன்பம் எல்லாம் விரைவில் கூடும்
என்னுயிரும் ராமரே என்மூச்சும் ராமரே என்னிதயம் ராமரே என்வாழ்க்கை ராமரே என்கண்கள் ராமரே கண்மணியும் ராமரே என் மனத்திரையில் எப்பவும் மலருமவர் ரூபமே என் மூளை எப்பவும் துதிப்பதவர் பாதமே! ராமர் ராமர் ஜெய ராஜா ராமர் ராமர் ராமர் ஜெய சீதா ராமர் ராமர் ராமர் ஹரே ரகுவர ராமர் ராமர் ராமர் ஹரே ரவிகுல ராமர் கொழு கொழு குழந்தை கௌசல்ய ராமர் துறு துறு சிறுவன் தசரத ராமர் கல்விகள் கற்ற வசிஷ்ட ராமர் ஆற்றல்கள் பெற்ற கௌசிக ராமர் இணை பிரியாதவர் லக்ஷ்மண ராமர் ராஜ குருவாம் பரத ராமர் தந்தை போன்றவர் சத்ருக்ன ராமர் அன்புள்ள கணவன் சீதா ராமர் உற்ற தோழன் குகனின் ராமர் உதவும் நண்பன் சுக்ரீவ ராமர் தெய்வ உருவாம் அனுமத் ராமர் ஞான சூரியன் ஜாம்பவ ராமர் மூத்த மகனாம் சுமித்ர ராமர் மன்னவன் பிள்ளை சுமந்தர ராமர் மன்னித்தருளும் கைகேயே ராமர் மகனே போன்றவர் ஜனக ராமர் எளிய விருந்தினர் சபரியின் ராமர் அபயம் அளிப்பவர் விபீஷண ராமர் கடன்கள் தீர்ப்பவர் சடாயு ராமர் பாப வினாசனர் கோதண்ட ராமர் ஆண்கள் போற்றும் ஆதர்ஷ ராமர் பெண்கள் போற்றும் கற்புடை ராமர் மக்கள் மகிழும் அரசுடை ராமர் பக்தர் நெகிழும் பண்புடை ராமர் வேள்விகள் காக்கும் காவலன் ராமர் சாபங்கள் போக்கும் அகல்ய ராமர் இரு மனம் இணைக்கும் கௌதம ராமர் திருமண நாயகன் ஜானகி ராமர் சிவ வில் முறித்த பராக்ரம ராமர் ஹரி வில் தரித்த சத்ரிய ராமர் கடலை வென்ற வருண ராமர் பாலம் கண்ட சேது ராமர் மரம் ஏழு துளைத்த தீர ராமர் மறு நாள் வரச்சொன்ன வீர ராமர் குறையற்ற குணமகன் வீர்ய ராமர் குலப் புகழ் காத்த சூர்ய ராமர் சீதையைப் பிரிந்த மக்களின் ராமர் காதலை மறவா சீதையின் ராமர் தாயுமானவர் லவகுச ராமர் தாயாய்க் காக்கும் விஷ்ணு ராமர்
சராசர குரு என்றும், சர்வஸ்வரூபி என்றும் விஷ்ணுவுடைய அவதாரம் தர்மத்தைக் காப்பாற்றவும், சாதுக்களை அவர்களுடைய கர்மத்தளைகளிலிருந்து நீக்கி மோட்சம் அளிக்கவும் ஏற்படும்.சம்பளக் கிராமத்தில் முக்கியமானவரும், மகாத்மாவுமாகிய கல்கி என்ற பெயருடன் பகவான் அவதரிப்பார். அணிமாதி அஷ்டமா சித்தியுடன், சத்திய சங்கல்பம் முதலிய குணங்களுடன் லோகநாயகன், வேகமாகச் செல்லும் குதிரை மீது ஏறிக்கொண்டு கத்தியால் தீயோரை அடக்குவார் ஒப்பற்ற வேகம் கொண்ட குதிரை மீது ஏறி விரைவில் உலகெங்கிலும் சஞ்சாரம் செய்து, அரச வேடம் தாங்கி மறைவில் வாழும் திருடர்களை கோடிக்கணக்கில் சம்ஹாரம் செய்வார். துஷ்டர்கள் அழிவர்.அதன் பின்பு புண்ணிய வாசனை கலந்த காற்றினால் தீண்டப் பெறும் நாடு நகர மக்கள் உள்ளம் தெளிவு பெறும். அவர்களது உள்ளத்தில் சத்துவகுண சீலரான பகவான் வாசம் செய்வார். அவர்களுடைய சந்ததி நல்ல வகையில் நல்லவர்களாக பன்மடங்கு பெருகும். தர்மத்திற்கு உறைவிடமான பகவான் விஷ்ணு கல்கி அவதாரம் எடுக்கும் பொழுது இந்த உலகம் பழைய கிருதயுகம் எப்படி இருந்ததோ அதன்படி மாறும். மக்களின் பிறப்பும், சாத்வீகமாகத் திகழும்.சூரியன், சந்திரன், குரு ஆகிய மூவரும் பூச நட்சத்திரத்தில் ஒரே ராசியில் எப்பொழுது கூடுகிறார்களோ அதுவே மறுபடித் தோன்றக்கூடிய கிருதயுகம் எனப்படும். ஸ்ரீ ஹரியின் தசாவதாரக் கதைகளை ஏகாதசி, துவாதசி காலங்களில் படித்தாலோ, கேட்டாலோ நமக்கு அளவில்லாத மகிழ்ச்சியும், மங்கலமும் உண்டாகும் என ஸ்ரீமத் பாகவதம் கூறுகிறது.
மஹாபாரதத்தில் : விஷ்ணுராத்மா பகவத் சிவஸ்ய சிவனுக்கு ஆத்மா விஷ்ணு யாதொரு (விஷ்ணுவின் தொப்புளில் தோன்றிய ) தாமரையில் பிரம்மன் உண்டானார். பிரம்மனிடமிருந்து சிவன் உண்டானார். சிவனிடமிருந்து முருகன் உண்டானார். வேதத்தில் உள்ள அதர்வசிரஸில் சிவநாமங்களே பயன்படுத்தப் பட்டிருந்தாலும் அந்த நாமங்கள் அனைத்தும் தன்னுடைய நாமங்களாகவே ஓத வேண்டும் என கிருஷ்ணர் கூறுகிறார்.
விஷ்ணுபுராணத்தில் : பகவான் கிருஷ்ணர் சிவபெருமானிடம் கூறுகிறார். கலியுகத்தில் அசுரத்தன்மையுள்ள மனிதர்கள் இருப்பார்கள் அவர்கள் தவறுகள் செய்துகொண்டே என்னையும் துதிப்பார்கள் அவர்கள் என்னை வணங்கிக்கொண்டே பாவகாரியங்கள் செய்துவருவதை தடுக்க நீர் உன்னை முழுமுதற்கடவுள் என கூறிக்கொண்டு சாஸ்த்திரகளை தவறாக புரிந்து கொள்ளும் படி செய்து அவர்களை திசை திருப்பி சிறிதுசிறிதாக பக்குவம் பெறும்படி செய்து முடிவில் என்னை முழுமுதற்கடவுள் என கூறி என்னை அடைய வழிவகுக்கவும். என கூறுவதாகயுள்ளது.தவறுசெய்யும் மக்களை திசை திருப்புவதற்காகவே சிவபெருமான் தன்னை முழுமுதற்கடவுள் என கூறினார் என பத்மபுராணம் விஷ்ணுபுராணத்தில் அவரே கூறுகிறார்
கருடபுராணத்தில் : பகவான் கிருஷ்ணா; ஒரு பக்தரை காக்க என்னினால் அவரை அழிக்க யாராலும் முடியாது. கிருஷ்ணர்; ஒருவரை அழிக்க என்னினால் அவரை யாராலும் காக்க முடியாது. உதாரணம் ராவணன் சிவனின் பக்தன். ஆனால் ராமர் அழிக்கும் போது சிவனால் காக்கமுடியவில்லை. அதுபோல் ஹிரண்யகசிபு பிரம்மாவின் பக்தன். ஆனால் நரசிம்மர் அழிக்கும் போது பிரம்மாவால் காக்க முடியவில்லை . அதுபோல் கிருஷ்ண பக்தனான அம்பரீசனை துர்வாசர் அழிக்க முயன்றபோது சுதர்சன சக்கரம் துர்வாசரை அழிக்கவந்தது. துர்வாசமுனிவர் பிரம்மா, சிவன் போன்ற தேவர்களை சரணடைந்தும் அவர்களால் காக்கமுடியவில்லை.

கீதையைத் தியானிக்கிறவரை பாவங்கள் தீண்டாது.கீதை எங்கிருக்கிறதோ அங்கு புண்ணிய தீர்த்தங்கள் அனைத்தும் வந்து சேர்கின்றன.எங்கு கீதை வாசிக்கப்படுகிறதோ அங்கு சீக்கிரமே சகாயம் வருகிறது.எங்கு கீதை கற்கப்படுகிறதோ அங்கு நான் (பரமாத்மா) வாசம் செய்கிறேன்’.இது பகவானின் வாக்கு.பரமாத்மா கண்ணனை விட சிறந்த ஞானியும் இருக்க முடியாது.பகவத் கீதையைவிட சிறந்த நீதிநூலும் இருக்க முடியாது.கண்ணனைத் துதிக்கமுடிந்தவரும்,கீதையைப் படிக்கமுடிந்தவரும் பாக்கியவான்கள்.கீதை பிறந்த கதை,தியான யோகம்,விபூதி யோகம்,பக்தி யோகம்,புருஷோத்தர யோகம் ஆகியவை இந்நூலில் அடங்கியுள்ளது.